தாடி

என்னிதயப் பிரதேசத்திற்குள்
அவள் பிரவேசிக்கும் முன்- என்
கன்னப்பிரதேசத்தை நீ
கைப்பற்றிக்கொண்டாய்!

கன்னம் உரசினால் - அவள்
மென்பட்டு மேனி
புண்பட்டுப் போகுமேயென
உன்னை விலக்குவதை
உவகையுடன் செய்திருந்தேன்!

அவளோ
வகுப்பறை கணக்கில் மட்டுமின்றி
வாழ்க்கைக் கணக்கிலும்
தேர்ந்த கைக்காரி;
ஆடைப் போல் சுலபமாய்
ஆளையும் மாற்றிவிட்டாள்!

நிரந்தரம் நீதான் வா;
நிலைக்கட்டும் நம் உறவு;
துரோக வலிக்குக் குறியீடாக…
காதல் காயத்திற்கு களிம்பாக…

எழுதியவர் : ஜ. கோபிநாத் (25-Jan-22, 10:39 am)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 98

மேலே