தடமென் பணைத்தோள் தளிரிய லார் - இனியவை நாற்பது 37
இன்னிசை வெண்பா
இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென் றுணர்தல் இனிது. 37
- இனியவை நாற்பது
பொருளுரை
தனக்குள்ள இளமைப் பருவத்தை முதுமைப் பருவமென்று நினைத்தல் இனியது.
சுற்றத்தாரிடமிருந்து அச்சத்திற்குக் காரணமாகாத இனிய சொற்களைக் கேட்பது இனியது.
பெரிய மென்மையான மூங்கிலை யொத்த தோள்களையும், தளிரை யொத்த மென்மையையும் உடைய பிற மகளிரை நஞ்சென்று உணர்வது இனியது.