எட்டிமர வேர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஆலவிஷம் ஒக்கும் அருந்தக் கடிதீரும்
ஞாலமதிற் பித்தகுண நாசமாம் - ஆலைக்கோல்
அட்டியபா காமொழியே யானவிஷ முஷ்டியெனும்
எட்டி மரவே ரிது
- பதார்த்த குண சிந்தாமணி
கடுமையான விடமுடைய பாம்பின் விடங்களை எட்டிமரவேர் நீக்கிவிடும்; பித்தத்தைப் போக்கிவிடும்