ஒருதலைக் காதல்

காதல் சொல்ல வந்தேன்- நீயோ
காயம் பலவும் தந்தாய்
கண்ணில் சிலையாய் வடித்தேன்-நீயோ
கண்ணீர் விலையாய்க் கொடுத்தாய்
உள்ளம் உனக்கே தந்தேன்-நீயோ
கள்ளம் கண்டேன் என்றாய்
காதல் தாகம் கொண்டேன்-நீயோ
கானல் நீராய்ச் சென்றாய்
உயிரைக் கையில் தந்தால்-நீயும்
உண்மையை உணர்ந்திடு வாயா?
விண்ணும் நீயென எண்ணும் மனதை
மண்ணில் புதைத்திடு வாயா?

எழுதியவர் : த.கிருத்திகா (31-Jan-22, 7:25 pm)
சேர்த்தது : கிருத்திகா
Tanglish : oruthalaik kaadhal
பார்வை : 153

மேலே