சூரணம் - தைலம் - லேகியம் - கிருதம் - பஸ்பம் - கறிகள் - பழங்கள் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

சூரணந் தைலமி லேகங் கிருதஞ்சொற் பனிரண் டென்னச்
சேருநா ழிகையாம் பஸ்பஞ் சீரணம் அரைச்சா மத்திற்
கூரிய கறிக ளெல்லாங் கூறில்நா ழிகையே ழாகுஞ்
சீரிய பழங்க ளெல்லாஞ் சீரணஞ் சாமந் தன்னில் 1494

- பதார்த்த குண சிந்தாமணி

சூரணம், தயிலம், இலேகியம், கிருதம் இவை 12 நாழிகையிலும், பற்பம் மூன்றே முக்கால் நாழிகையிலும் நல்ல காய்கறிகள் 7 நாழிகையிலும், உயர்ந்த பழங்கள் எல்லாம் 7 நாழிகையிலும் சீரணமாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Feb-22, 4:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே