காய்ந்தாறிய சலம் - கஷாயம் - பழச்சாறு - சோறு - பால் - தேன் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
சாலவே காய்ச்சி யாறுஞ் சலம்பத மூன்றே முக்காற்
சீலமாங் கஷாய மூன்று சேர்பழச் சாறு மாறாந்
தாலமாஞ் சோறி ரண்டு சாமமா மிருப தாகும்
பாலுதேன் பன்னி ரண்டு நாழிகை பகரு வாரே 1492
- பதார்த்த குண சிந்தாமணி
காய்ந்தாறிய நீர் மூன்றே முக்கால் நாழிகையிலும், கஷாயம் ஆறு நாழிகையிலும், கனி ரசங்கள் ஆறு நாழிகையிலும், சாதம் இரண்டு சாமத்திலும் (ஆறு மணி நேரம்), பால் 20 நாழிகையிலும் தேன் 12
நாழிகையிலும் சீரணமாகும்