வாழ்க்கைப் பாதை

நீண்ட பாதை நெடிய சாதனை!
*************

முடிவிலாப் பாதைகள் முன்னேற்ற வாய்ப்புகள் /
அடிமுதல் நுனிவரை அழகிய செவ்விலை !

பனிப்புகைப் போர்த்தியப் பனிமலை வரவேற்கும் /
தனியரின் முயற்சிகள் தந்திடும் வெற்றியே!

பாதைகள் பலவிதம் பாடுகள் எதிர்வரும் /
வாதைகள் அஞ்சினால் வாழ்க்கையே வாடிடும்!

இலக்கினைத் தேர்ந்தெடு இயங்கிடு வேகமாய் /
கலங்கிடா மனதொடுக் கடந்திடு வென்றிடு !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (5-Feb-22, 2:05 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 505

மேலே