விழித்தெழு வெற்றி பெறு

விழித்தெழு.
#########

வாழ்வில் சிறந்திட வைத்திடு இலக்கு /

இலக்கு உயர்ந்ததாய் இருந்திடல் சிறப்பு /

சிறந்த முயற்சிகள் அளித்திடும் வெற்றியை /

வெற்றியைக் காத்திட விழிப்பொடு உழைத்திடு /

உழைத்திடும் யாவரும் உயர்வினைப் பெறுவர் /

பெறுவதை இலக்காய் எண்ணி விடாதே /

விடாது தொடர்ந்து இலக்கினை வென்றிட /

வென்றிட வேண்டும் ஒவ்வொரு நாளும்/

நாளும் கிழமையும் உழைத்திடக் கிடைத்தவை /

கிடைத்த வாய்ப்பினைத் துய்த்திட விழித்தெழு!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (8-Feb-22, 9:53 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 519

மேலே