இதயங்கள் இடையே இத்தனை தொலைவா

விண் மீன்கள் விந்தையானவை!
புரிந்து கொள்ளவியலா
புதிர்களாய்
பலநூறு
ஒளி ஆண்டுகளுக்கு அப்பால்
மின்மினி போல
கண்சிமிட்டி மறைகின்றன !

மீன்களின் தொலைவினை
எளிதின் அளந்திடும்
வானியலாளரும்
இதயங்களுக்கு இடையிலானத் தொலைவினை அளப்பதில்
துவண்டு விடுகின்றனர் !

இதயங்களுக்கிடையே இருக்கும் தொலைவுகளை
இல்லாது செய்வோம்!

புதிய உலகம் செய்திட
இணைந்த இதயங்கள் காண்போம்!!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (10-Feb-22, 8:57 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 125

மேலே