தன்னம்பிக்கை கவிதை
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
இன்று
வென்றவர்கலெல்லாம்
அன்று
தோற்றவர்கள்தான் ....
இன்று
எழுந்தவர்கலெல்லாம்
அன்று
விழுந்தவர்கள்தான் ......
இன்று
புகழப்படுபவர்கலெல்லாம்
அன்று
இகழப்பட்டவர்கள் தான் .....
இன்று
சாதனையைச் சந்நித்தவர்கலெல்லாம்
அன்று
சோதனையைச் சந்தித்தவர்கள்தான் ...
இன்று
சிரிப்பவர்கள் எல்லாம்
அன்று
அழுதவர்கள் தான்
முடியும் முடியும் என்று சொல்லிக்கொண்டே! முன்னேறு...
முடியாதது
எதுவும் இல்லை என்ற
முடிவுக்கு
நீ வந்து விடுவாய்....!!!
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
சூரியன் ஒன்றுதான்
ஆனால்
அது உதிக்கும்
ஒவ்வொரு நாட்களும்தான்
புதியது....!
செடி ஒன்று தான்
ஆனால்
அது பூக்கும்
ஒவ்வொரு பூக்களும்தான்
புதியது....!
கடல் ஒன்றுதான்
ஆனால்
அது உருவாக்கும்
ஒவ்வொரு அலைகளும்தான்
புதியது...!
அனுபவம் ஒன்று தான்
ஆனால்
மனிதர்கள் ஒவ்வொருவரும்
அனுபவித்த முறைகள்தான்
புதியது.....!
*கவிதை ரசிகன்*
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️