வெற்றி உன் விரல்களில்

வெற்றி உன் விரல்களில்...
**************

அடைந்திடும் வரையில்
அடங்கிடா முயற்சி;

உடைந்திடும் தடைகள்
உனக்கேன் அயர்ச்சி!

பிறந்தது சாதனைப்
புரிந்திடத் தானே;

பிறகேன் தயக்கம்
தொடர்ந்திடு நீயே!

உயரத்தில் இலக்கினை
உயர்த்தியே வைத்தாய்

ஒப்பிலாத் திட்டம்
ஓயாது உழைத்தாய் !

வெற்றிகள் உந்தன்
விரல்களில் வாழும்;

கற்பனைக் கனவுகள்
கைவச மாகும்!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (18-Feb-22, 1:58 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 688

மேலே