வழியில் சிக்கிய நான்

நூலென்று எண்ணி
நூலிழையில் சிக்கியது
நுண்ணுயிர் பூச்சி ஒன்று

"சிறப்பென்று" எண்ணி
சிறிதாய் சிரித்தது
சிலந்திப் பூச்சி

"ஐயோ!! சிறிய பூச்சி
சின்னாபின்னமாகி
சிதறிப் போகும்" என
என் உள்மனம்
பதறியது

நூலென்றும் பாராமல்
நுண்ணுயிர் பூச்சி
"சிலந்தி வலை பற்றி
சீறிப்பாய்ந்து
சின்னாபின்னமாக்கியது"
சிலந்தியை...!!

பதறிய என்உள்ளம்
பதைபதைத்தது - கணவன் கை
பற்றிக் கொண்டு
பாதை கடந்தேன்
பயமும் கலக்கமும்
புடைசூழ ...!!!

தலைப்பு சுருக்கம்:
[சிலந்தியை சிறுபூச்சி தின்றுவிட்ட காட்சியை பார்த்த ஒரு மனைவியின்
கவிதை]

எழுதியவர் : ச. எடிசன் இராக்லந்து (20-Feb-22, 12:19 am)
சேர்த்தது : ERJ
பார்வை : 216

மேலே