நவராத்திரி

நவராத்திரி


அசுரனை அழிக்க மூன்று சக்திகளும் ஒன்று சேர்ந்து
ஆயுதம் கையில் எடுத்து கடுமையாக போர் செய்து
இன்னல் விளைவித்த மகிஷனை கொன்று விட்டு
ஈசனிடம் திரும்பி சென்று பக்கம் அமர்ந்து அருள் செய்ய
உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் அவளை துதிக்க
ஊரெல்லாம் பக்தியுடன் கொண்டாடும் ஒன்பது இரவுகள்
எங்கும் நிறைந்த சக்தியை துதிக்க படிகள் அமைத்து அலங்கரித்து
ஏற்றம் மிகுந்த வகையில் அழகிய பொம்மைகொலுவாக்கி வைத்து
ஐயம் ஏதும் இல்லாமல் அவளை மூன்று தினங்களுக்கு ஒவ்வொன்றாக
ஒருமனதோடு உறவும் சுற்றமும் மஞ்சள் குங்குமம் வாங்க அழைத்து
ஓதிடும் மந்திரமும் பக்தி பாடலும் ஒலிக்க அன்னையை வேண்டி
அசுரனை அவள் வென்ற பத்தாவது நாளை தசமி என்றழைத்து
எங்கும் எதிலும் வெற்றி என குவலையமும் கொண்டாடிடுமே

எழுதியவர் : (1-Oct-24, 10:25 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 12

மேலே