மனதின் அடம்

உனது காலடி பட்ட தடம்
நீ இருக்கும் இடம்
அறிய மனதில் அடம் !
நீ மறுத்ததில் அறிந்தேன் உன் திடம் ....
குடம் குடமாய் வழியும்
விழிநீரும் வற்றிய
பாவையின் விழிகளில்
உன் நிழற்படம் ...
இமை மூடினாலும்
திறந்தாலும்....

எழுதியவர் : சுலோ வெற்றிபயணம் (8-Feb-22, 6:56 pm)
Tanglish : manathin adam
பார்வை : 56

மேலே