சிற்றிதயம் தேடும் சிறுமனது

பருப்பொருளாய் நின்ற
என்னை
மோதிய நின் பேராற்றல்

பெருவெடிப்பாய்ச் சிதரடித்து எல்லையில்லாப்
பெருவெளியில் துரத்தியதே!

அளவறியா ஈர்ப்போடு ஆவதெல்லாம்
சேர்த்திழுக்கும் ஒளியோடு

காலமெலாம் உள்ளிழுக்கும் ஆற்றலுடன்
ஒன்றிணைந்து *நான்*இழந்த
விந்தையது
புரியலையே!

மண்ணுலகின் ஓரத்தில்
யாதொன்றும் அறியாது
முடங்கிக் கிடந்தாலும்

விரியும் விண்வெளியின் எல்லையெலாம் சுற்றிவரும்
நின் சிற்றிதயம் ஒன்றே நாடும்
ஏழை என்
சிறுமனது !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (8-Feb-22, 7:12 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 54

மேலே