காதல் காவியம்1
சந்தத் தமிழில் ஒரு
சிந்துகவி எழுத
எந்தன் மனதில் - ஓர்
ஏந்திழை ஆணையிட்டாள்.
சந்தம் அவள் சொல்லிலே...
சங்கம் அவள் கண்ணிலே...
சித்தம் தடுமாறி - மனம்
சீற்றம் கொள்ளுதே...
கத்துக்கரை ஒரமதில் அன்றொருநாள்
கத்துவந்த பாடம் சொன்னாய் பார்வையிலே...!
முத்துதிர மோகமதில் முகம்மலர
முத்திரையை நான் பதிக்க
ஏனடி வெட்கம்?
சித்திரம் சிரிக்கலையோ...! - உன்
சித்தமும் குழம்பலையோ?
சீக்கிரம் வாயாடி...என்
சித்தமும் நீயடி!