காதல்
காதல் ஒரு உணர்வு...
காதல் ஒரு கனவு...
காதல் ஒரு மாயை...
காதல் ஒரு மயக்கம்...
காதல் ஒரு சிலந்திவலை...
காதல் ஒரு வேகம்...
காதல் ஒரு சோகம்...
காதல் ஒரு நீர்க்குமிழி...
காதல் ஒரு எதிர்பார்ப்பு...
காதல் ஒரு ஏமாற்றம்...
பருவத்தில் வரும்
ஊக்கிகளின் மாயாஜாலம்.
காதல்...
நம்பக்கூடாததையெல்லாம் நம்பும்
பொய்யைக்கூட.
எல்லாவற்றையையும் தூக்கியெறிந்துவிடும்
மெய்யைக்கூட...
காதல்...
நுனியில் இனிக்கும்
அடியில் கசக்கும்
பட்டினத்தாரின் கரும்பு.
ஒவ்வொருவரும் கடந்துவந்த
கரடுமுரடான பாதைதான்.
முழுதாய்...இறுதிவரை இனிக்கும்
காதல் அரிதானது. அந்த
அரிதைச் சுற்றிச்சுற்றி
தினமும் சாகும்
விட்டில்பூச்சி விடலைகள்.
காதலின் வாழ்வென்னவோ
கொஞ்சம் நாள்தான். ஆனால்
அது விட்டுச் செல்லும் நினைவுகளோ
ஆறாத வடுக்கள்.