ஈழம்
குருதிப்புனலாய் கலந்து
வியர்வையில் நனைந்து
புதுயுகமாய் மாறும் தலைமுறையில்
புத்திசாலித்தனத்தை மிஞ்சிய
மொழிப்பற்றாளர்கள் வாழும் பூமியில்
வெற்றி மூச்சினோடு
துணையாய் நின்று வெல்லும்
சுய கெளரவம் மிக்க தமிழனும்
அவன் சிந்தனையும்
வென்ற பூமியில் பிறந்த நான் ....
என் காதலுடன் பொக்கிசமாய் !!!
காதலை காண விண்வெளி செல்ல வில்லை
ஆழ்கடலிலும் மூழ்கவும் இல்லை
பறந்து செல்ல எண்ணமும் இல்லை
இருந்தபடி இருக்கத்தான் அசைகள்
அமெரிக்கவும் நானும் மிகத்தூரம் என
என் புலன்களும் கருதவில்லை
கனவு காண எல்லைக்கோடுகள்
யாரும் என்முன் போடவும் இல்லை
பாதம் எடுத்துவைத்தால்
நீ பக்கம் என
என் இணையத்தள முகவரி சொல்ல
பலதரம் நான் வியந்து நின்று
உன் அருகில் என்னை கொணர்ந்த
அழகிய நிமிடங்கள் மாறவும் இல்லை
இருந்த போதிலும் என் முன் அழுத்தங்கள்
தொடர்ந்த வண்ணம் என் மனதில் ..
மாதங்கள் ஆகி வருடங்கள் கடந்தும்
நீ நிஜத்தில் என் அருகில் இல்லாத தருணம்
ஆலமரம் சிறு மழைத் தூறல்களால்
அறுந்து விழுந்தது போல
பொய்யான மாய விம்பங்கள் பலதும்
என் முன் முனைப்பாக இருக்க
உன் தேடலில் நான் மறைய நேரிடுமோ
என்ற யுத்த நேரங்கள்
என்னை அழுத்தம் கொடுக்க
மீண்டும் மீண்டும் நான்
உன்னை எடுக்கவே விரும்புகின்றேன்
தொலைத்திடுவேனோ என் மனம்
அலறும் நேரம்
அலறும் ஆந்தைகள் பயத்துடன்
என்னை விளிக்கச்செய்ய !!!
என் மனம் எண்ணியதோ
இந்த நிலையில்
ஈழத்தின் யுத்தம் என் காதலுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் என !!!!!!!!!