அலைகள்
அவளோடு கால்களோடு
ஆனந்தமாக முட்டி மோதி
விளையாடும் அலைகள்..%%
அந்தி வெயிலிலும்
தன் ஆர்வத்தை குறைக்காமல்
தன்னையே அழகு
படுத்துகிறது அலைகள் அவளால்..%%
புதுநிலவு தன்னை தீண்டுது
என அங்கும் இங்கும்
எகிறி குதிக்கிறது
அலைகள்.. %%
மண்ணில் பல தேவதைகள்
என்னில் கால் தடயங்களை
பதித்தாலும்
பெண்ணே உன் போன்று எவரும்
இல்லையடி என் இளம் தேவதையே.
%%