காதல் காதலர் 14

காதல் எனும் ஜோதியை ஏற்றி

விட்டேன்

காலம் எல்லாம் ஏறிய நான்

திரியாகிறேன் அவளே அதன்

ஒளியாகிறாள்

என் உயிரிலே கலந்த அவள் புது

உறவாகிறாள்

உயிர் உள்ள வரை என்

துணையாகிறாள்

என் வாழ்வுக்கு அவளே அர்த்தம்

ஆகிறாள்

உன்னில் பாதியாய் நான்

இருக்கிறேன்

உன்னோடு சேர்ந்து வாழ வந்து

இருக்கிறேன்

காதல் எனும் வார்த்தை சொல்லி

கணவன் ஆகிவிட்டாய்

துடிக்கும் இதயத்தின் இதய துடிப்பு

நீ என்று ஆகிவிட்டாய்

காதல் என்றால் நாம்தான் என

புரியா வைத்தாய்

காதலர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : தாரா (14-Feb-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 2163

மேலே