நிழற்குடை

நீ நிற்கும் நிழற்குடையின்
நிழற்படம் இன்னும் என்
இதயத்தில்
அந்திமாலையை மேலும்
அழகாக்கும் அற்புத காட்சி அது
அரை நிமிடங்களுக்கு ஒரு முறை
அசைந்து திரும்பும் கண்களை
அணுவணுவாக ரசித்த தரும்
அணுகுண்டு கண்களை
இடது - வலமாக நீ அசைக்கும்
போது அசைவின்றி போனேன்
கல்மரமாகினேன்
இவற்றை மேலும் அழகாக்கும்
சில நாட்கள்
அது மழை வரும் நாட்கள்
உனக்காக தான் நனைந்து
உன்னை நனைக்காமல்
தாங்கும் குடை கண்டு
கோவம் கோள்ளும் மழை
அதற்கு துணை போகும் காற்று
குடையை நீ இறுகப்பற்றுவதை
கண்டு இளகி போகும்
காற்று
மழையின் முயற்சி கடைசி
துளியிலாவது உன்னை தொட
உனது பாதங்களின் அடியில்
இத்தனையும் ரசித்து கொண்டு
இருந்தேன்
மழையின் கோவம்
என்மீது இறங்கிய போதும்

எழுதியவர் : ஞானி(மணிபாபு) (13-Feb-22, 10:45 pm)
சேர்த்தது : ஞானி மணிபாபு
Tanglish : nizharkkudai
பார்வை : 114

மேலே