ஞானி மணிபாபு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஞானி மணிபாபு |
இடம் | : Vellore |
பிறந்த தேதி | : 02-Oct-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 260 |
புள்ளி | : 75 |
உனக்குப் பிடிக்காத ஒன்றை, நீ பிறருக்குப் பிடிக்குமென்று நினைத்து செய்யாதே !⚡⚡💫💫
நீ
தலை கோதி உறங்க
வைக்க நீ வேண்டும் ..
என் தாயின் மடியில்
கண்ட கனவுகளை மீண்டும்
காட்டிட நீ வேண்டும் ..
வெளி வேதனைகளில்
நான் விழும் வேலைகளில்
விழி ஒளியாய் நீ வேண்டும்..
தந்தையின் விரலை
எட்டி பிடிக்கும் கைக்குழந்தை போல்
உன் விரல்கள் பற்றி
நான் இருக்க வேண்டும்...
நான்
தொலைந்து போன
உன் கனவுகளை
நான் சுமப்பேன்
உன் தந்தை
உன்னை தோளில்
சுமந்தது போல நான் ...
உன் இலக்குகளை அடைய
வழிவகைகளை செய்வேன்..
வாசலும் திறப்பேன்
வாயில் காவலனாக...
காலமும்
கூட்டுக்குள் அடைபடும்
பறவையாக ஆக்கமாட்டேன் ...
வானில்லை என்று ஏங்காதே
நானே வானமாக
மாறி வருவேன் ....
நீ நிற்கும் நிழற்குடையின்
நிழற்படம் இன்னும் என்
இதயத்தில்
அந்திமாலையை மேலும்
அழகாக்கும் அற்புத காட்சி அது
அரை நிமிடங்களுக்கு ஒரு முறை
அசைந்து திரும்பும் கண்களை
அணுவணுவாக ரசித்த தரும்
அணுகுண்டு கண்களை
இடது - வலமாக நீ அசைக்கும்
போது அசைவின்றி போனேன்
கல்மரமாகினேன்
இவற்றை மேலும் அழகாக்கும்
சில நாட்கள்
அது மழை வரும் நாட்கள்
உனக்காக தான் நனைந்து
உன்னை நனைக்காமல்
தாங்கும் குடை கண்டு
கோவம் கோள்ளும் மழை
அதற்கு துணை போகும் காற்று
குடையை நீ இறுகப்பற்றுவதை
கண்டு இளகி போகும்
காற்று
மழையின் முயற்சி கடைசி
துளியிலாவது உன்னை தொட
உனது பாதங்களின் அடியில்
இத்தனையும் ரசி
எட்டி எட்டி பார்த்து சிரித்தேன்நீ காத்திருந்த தருணங்களில்மருளும் உன் கண்களைக் கண்டுமயங்கி நின்றேன்உடன் இருப்பவன் உரைப்பதும் கேளாமல் உன்னை காண்பேன் நீ நிற்க்கும் போதுநீ பயணிக்கும் பேருந்து தாமதமாக வேண்டினேன்ஆனாலும் தாமதமாக வில்லைதாமதமாக பேருந்துக்கு நீ தவிப்பதை ரசித்து சிரிப்பேன்நீயோ பயணித்து விட்டாய்இன்னும் நிற்கிறேன் நான்
பிரிவும் இனிமை
தரும்
உணர்ந்தேன்
இமைகள்
பிரிகையில்
உன்னைக் கண்டு
மழைத்துளியும்
வெப்பம் தந்தது
அது
அவள் தம்மிலம் வழியே
எனக்கு
வண்ணம் பூசாதே காட்டிக் கொடுத்துவிடும்உன்னையும் என்னையும்
உதடுகள்
கருங்கடலில்
மாலை சூரியன்
அவள் கூந்தல்
ரோஜா
கண்ணாடி
சட்டத்தினுல்
பட்டை தீட்டிய வைரங்கள்
அவள் கண்கள்
காதலில் சிறகடித்த
காலை பொழுதுகள்!
என்னை தினமும் வட்டமடித்து
செல்லும் புறாக்கள்!
எழுகையில் என்னை மட்டுமே
பார்த்திடும் கதிரவன்!
இமைக்காமல் என்னையே நோக்கும்
அவளின் புகைப்படம்!
என்னையே அறியாமல்
சிரித்திடும் உதடுகள்!
கண்ணாடிமுன் திகட்டாமல்
செய்திட்ட ஒத்திகைகள் !
மலர்களோடு மட்டும் பேசிய
காதல் மொழிகள்!
அவளின் வரவுக்காக
கரைந்து போன நாட்கள்!
என்னை கடக்கும்போது இதயம்
துடிக்கமறந்த நிமிடங்கள்!
என் காதலை மறுத்த நேரம்
நான் மனதில் கண்ணீரோடு
புன்னகைத்த தருணம்!
மடிந்து போன முதல் காதல்!
மாறாத வலியுடன்.....
மறையாத நினைவுகளுடன்......
வட்டிக்கு வாங்கி
வாழை விதைத்தேன்
விளைந்து வாழை
வளர்ந்தது வட்டி
ஏனோ என் வாழ்வாதரம் மட்டும்
வளர்ச்சி இல்லை
பாவம் இந்த பாமர
விவசாயி !!!?