நினைவுகள்

காதலில் சிறகடித்த
காலை பொழுதுகள்!
என்னை தினமும் வட்டமடித்து
செல்லும் புறாக்கள்!
எழுகையில் என்னை மட்டுமே
பார்த்திடும் கதிரவன்!
இமைக்காமல் என்னையே நோக்கும்
அவளின் புகைப்படம்!
என்னையே அறியாமல்
சிரித்திடும் உதடுகள்!
கண்ணாடிமுன் திகட்டாமல்
செய்திட்ட ஒத்திகைகள் !
மலர்களோடு மட்டும் பேசிய
காதல் மொழிகள்!
அவளின் வரவுக்காக
கரைந்து போன நாட்கள்!
என்னை கடக்கும்போது இதயம்
துடிக்கமறந்த நிமிடங்கள்!
என் காதலை மறுத்த நேரம்
நான் மனதில் கண்ணீரோடு
புன்னகைத்த தருணம்!
மடிந்து போன முதல் காதல்!
மாறாத வலியுடன்.....
மறையாத நினைவுகளுடன்......

எழுதியவர் : கௌரிசங்கர் மாது (28-Aug-15, 1:36 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 76

மேலே