காதலர் தின மடல்

கண்கள் பேசிட
எழுந்து வரும் காதலுக்கு
விழாவாம் இன்று

என்னில் என்னை
தின்று
விரைவாய் வளரும்

அன்பானவளுக்கு
இதயம் திறந்து
சில வரிகள்

உன் விழிகள்
என் கவிதையின்
திறவுகோல்...

உன் இதழின் சிரிப்பு
என் மகிழ்ச்சியின்
அளவுகோல்...

உன் அணைப்பு
என் நிம்மதியின்
உறைவிடம்...

உனக்கும் எனக்கும்
உண்டு வாழ்வில்
ஓராயிரம் வேறுபாடுகள்

இருவேறு துருவங்கள்
ஈர்க்கும் விசை அதிகமாம்
உண்மை....

உன் ஒவ்வொரு
அசைவிலும்
அறிகிறேன் நான்...

உன் கோபத்தில்
விட்டுக்கொடுப்பில்
மௌனத்தில்

அனைத்திலும்
காதல்...
வாழ்கிறேன் நான்!

என் இளமைகால
தேடலில்
அறியவில்லை உன்னை...

இன்று என் வாழ்வின்
வழித்துணையாக
கரம் பிடித்தபடி நீ...

நாளும்
நனைகிறேன்
காதலில்!

என் காதல் சுடருக்கு
காதலர் தின
நல்வாழ்த்துகள்!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (14-Feb-22, 12:30 pm)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 200

சிறந்த கவிதைகள்

மேலே