வில்லங்கராஜ்

தம்பி நீ யாருப்பா? ஊருக்குப் புதுசா இருக்குதே?
@@@@@
வணக்கம் ஐயா. எம் பேரு முருகவேலு. அமெரிக்காவில வேலை பார்க்கிறேன். நான் சின்னப்பையனா இருக்கிறபோதே என்னோட அம்மா அப்பா அமெரிக்காவில குடியேறிட்டாங்க, எனக்கு வயது நாற்பது ஆகுதுங்க. என்னோட அப்பா பேரு வேல்முருகன், இந்த ஊர் எங்க சொந்த ஊரா இருந்தாலும் எனக்கு இங்க என் நண்பன் அறிவழகன் முகம் மட்டும் என் மனதில் பதிஞ்சு போச்சுங்க ஐயா. அதுதான் அவனைப் பார்க்கலாம் என்று வந்தேன். அவன் வீடு எங்கே இருக்குதுங்க ஐயா.
@@@@@@@@@
அட நீ வேல்முருகன் பையனா, அவன் என்னோட நண்பந்தான் தம்பி. அமெரிக்கா போனவன் இதுவரை பொறந்து வளர்ந்த ஊருக்கு வரவே இல்லை. அறிவழகன் பக்கத்து நகரத்துக் கல்லூரில பேராசிரியரா வேலை பாக்கறான். அவன் அங்கயே வசிக்கிறான், அவனோட விலாசம் தெரியாது. அவனோட வீட்டுக்குப் போயி விசாரிச்சுக்கா,
@@@@@@
அய்யா அறிவழகனோட வீடு எந்தத் தெருவில இருக்குது போறவழி எப்படின்னு சொல்லுங்க ஐயா.
@@@@@@@
தம்பி இந்த ஊரில பால்குடிக்கிற கொழந்தைகிட்டக்கூட “வில்லங்கராஜ் வீடு எங்க இருக்குது?”னு கேட்டாச் சொல்லும். அந்தக் கொழந்தை அவன் வீட்டுக்கு வழிகாட்டும்.
@@@@@@
ஐயா, நான் கேட்கிறேன்று தவறாக நினைக்க வேண்டாம், அவருடைய உண்மையான பெயரே “வில்லங்கராஜ்”தானுங்களா?
@@@@
இல்லை தம்பி. அவன் பேரு வில்வராஜ். அவன் பத்திரப் பதிவு அலுவலகம் பக்கத்தில பத்திரம் எழுதற வேலை செய்யறான். அவங்கிட்டப் போன அரை மணி நேர்த்தில வில்லங்க சான்றிதழ் வாங்கிடலாம், அதனால அவனை எலலாரும் ’வில்லங்கராஜ்’னுதான் சொல்லுவாங்க. சரி தம்பி. அங்க பாரு ஒரு போடியன் வர்றான், அவங்கிட்ட “வில்லங்கராஜ் தாத்தா வீட்டைக் காட்டு தம்பி”னு கேளு, அவன் நேரா வில்லங்கம் வீட்டிலயே உன்னைக் கொண்டுபோய் விட்டுடுவான்.
@@@@@@@@
மிக்க நன்றிங்க ஐயா.

எழுதியவர் : மலர் (15-Feb-22, 7:51 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 86

மேலே