காதல் ஈரமான ரோஜா
மண்ணின் மணம் மழை வந்தால்
தெரியும்
காதல் ரோஜாவின் வாசம் அவளை
கண்டால் புரியும்
இமைகள் அவளை படம் பிடித்து
காட்டும்
இதயத்தில் அவளின் நினைவு
ஓட்டம்
என் மனவானில் புது தடுமாற்றம்
அவள் வந்தால் என் வாழ்வின்
முன்னேற்றம்
முடிவில்லா வாழ்வின் அவளே
தேரோட்டம்
எல்லை இல்ல அன்பின்
அடையாளம்
என்று வாழ்வில் அழகாகும்
இரு இதயங்கள் ஒன்றாகும்