அமுதமொழியே நமக்கு அரண்
குறளடி வஞ்சிப்பா
தமிழென்றிடும் உயிருக்கிங்கே
உமியளவினும் இடரதுவுமே
வந்ததெனில் முரட்டுபேயென
மாறிபடியே இடரினையுமே
எதைச்செய்தும் களைந்திடவே
மிடுக்காய்
ஆயுதம் எடுத்து தீரராய் சிதைக்க
உறுதியை வெறியுடன் இணைந்தே எடுப்போமே. (க)
அகிலத்தையே படைத்துகாக்கும்
இறைவனெனும் மகாசத்தியோ
ஆட்சியாளரோ தொழிலதிபரோ
அணுகுண்டெனும் ஆயுதத்தையே
பயன்படுத்தியே அழித்திடவுமே
நினைக்கும்
எவரெனில் தமிழைக் காக்க கல்லென
மாறியே எவரையும் பொடியாய் ஆக்குவோமே (உ)
பரிதாபமோ பழகியதையோ
உறவுகளையோ நட்பினையோ
வரவுசெலவை எவைகளையுமே
மனதினுள்ளே நுழைக்காதீர்
தமிழமுதையே இகழையிலே
உயிர்பயம்
வரும்வரை அவரையும் எதிர்க்க துணிந்து
மறத்தமிழ் வாழ்ந்திட திருவுயிர் தருவோமே (ங)
தமிழதுவுமே மிடுக்கெனவே
அதிகாரமும் செய்வதற்கென
நாட்டினுள்ளே எவரோடுமே
இணைந்தபடியே கூட்டணியுடன்
ஆட்சியையுமே கைக்கொள்ளவே
இலகியே
போர்க்குணம் கொண்டே சென்றே தெளிவாய்
வென்றிட வீரராய் இருப்போம் நாமுமே. (ச)
வாணிபங்களே மொழியையுமே
வளர்த்திடுகிற பெரியகாரணி
அதனையுமே அருந்தமிழரும்
அயராமலே செய்திடவுமே
எழிச்சியுடனே முனைந்திடினிலே
வருமோ
துயரெதும் பைந்தமிழ் பசுமை ஆட்சிக்கு
வளமும் கூடுமே அகிலம் வணங்குமே (ரு)
----- நன்னாடன்.