என்னை கோமாளியாய் ஆக்கிவிடு

என்னை கோமாளியாய் ஆக்கிவிடு
தெய்வமே....
என்னை அப்படியே ஆக்கிவிடு.
குள்ளமாய்....கிறுக்குத்தனமாய்...
கருப்பாய் ....வெகுளித்தனமாய்...
ஒல்லியாய்...சிரிக்கும்படியாய் ...
கோமாளியாய்....குழந்தையாய்...
என்றும் என்னை அப்படியே இருக்கவிடு.
அவனுக்கு
சாதி இல்லை....மதம் இல்லை...
குலம் இல்லை...கோத்திரம் இல்லை...
வேதம் இல்லை....மன பேதம் இல்லை...
அழுபவர்களுக்காய் சிரிப்பான்.
சிரிப்பவர்களுக்காய் அழுவான்.
ஆறாத ரணமாய் மனம் அழுதாலும்
தேறாத மனங்களுக்காய் ...
குதிப்பான்...ஆடுவான்...
குட்டிக்கரணம் போடுவான்...
அடிப்பான்...அடிபடுவான்...
வார்த்தை ஏதும் சொல்லாமல்
முகத்தில் வர்ணஜாலம் காட்டுவான்.
அவனைப்போல் என்னையும் ஆக்கிவிடு.
எல்லோரும் சிரிக்க...
எல்லோரும் இன்புற...
என் சோகம் மறைத்து
வெளிவேஷம் போட்டு
நாடகம் முடியும் வரை
சிரித்து..சிரித்து...
சிரிப்பதுபோல் நடித்து
சிந்திக்க வைத்து
சிறடித்து பறக்க
என்னை கோமாளியாய் ஆக்கிவிடு...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (17-Feb-22, 6:21 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 42

மேலே