மழலை

மழலை..
*******

தாயெனும் தகுதியைத் தந்தவள் மழலை /

மழலையின் குரலிசை மயக்கிடும் உலகினை /

உலகினை ஆண்டிட உதித்த செல்வமே /

செல்வமே இலாரையும் செழித்திடச் செய்யுமே /

செய்யுமே மகிழ்வினை செகமெலாம் மழலையே !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (19-Feb-22, 10:03 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 82

மேலே