மகனே

மகனே..!!

என் உயிரில்
பாதி நீயடா..!!

உதிரம் கொண்டே
உன்னை செதுக்கினேன்டா..!!

கானாத வலியை கண்டு
கவலை கொள்ளாதவள் நான்..!!

உன் ஒற்றை சிரிப்பில்
உலகத்தை மறந்தவள் நான்..!!

உன் சிறு சிறு கேள்விகளுக்கு
சளைக்காமல் பதில் சென்னவளும் - நானே..!!

நீ நடப்பதைக் கண்டு
ஆச்சரியம் கொண்டவளும் நானே..!!

இப்படி எல்லாம் உன்னை
ரசித்தாள் என் முதுமையை மறந்தேனாடா..!!

மகனே என் செல்லமே
தள்ளாடும் வயதில் என்னை
தாங்கி கொள்ளலாடா..!!

என் செயல் உன்னை
‌ வேறுப்பேற்றும் வேறுத்துவிடாதே
என் அன்பு மகனே..!!

என் அனபும் ஆறுதலும்
‌ நீயடா என் செல்லமே..!!

காடு என்னை அழைக்கையிலும்
என் மனம் முழுவதும்
நிறைந்து இருப்பது
‌ நீ ஒருவனே என்
அன்புக்குரிய மகனே..!!

எழுதியவர் : (20-Feb-22, 6:08 am)
பார்வை : 89

மேலே