மழலையர்க் குறும்புகள்
மழலையர்க் குறும்புகள் ..
**************
மழலையர் செய்திடும் மகிழ்ந்திடக் குறும்புகள்!
பிழையிலாப் பிஞ்சுகள் பேசிடும் கரும்புகள்!
தழைத்திடும் ஆலெனக் குலம்வளர் அரும்புகள்!
சோர்ந்திடும் வேளையில் சுகந்தரும் நாதங்கள்!
மார்பினில் உதைத்திடும் மென்மலர்ப் பாதங்கள்!
-யாதுமறியான்.