அம்மா

தாயின் அன்பு..

*************
வேறென்ன வேண்டும் தோளொன்றேப் போதும் /
சோறென்ன நீரென்ன சுகமாக மாறும் !

தொடுவானத் தொலைவிற்கும் தொடுகின்றக் கரங்கள் /
கொடுப்பாயே அணைப்போடு
கேளாத வரங்கள் !

தனக்காக எதுவொன்றும் தேடாதத் தாயே !
எனக்காகச் சேர்த்தாயே ஏராளம் நீயே !

நிலையில்லா வாழ்விலே நிரந்தரம் தாய்மையே/
விலையில்லா நிம்மதி
தாயவள் தோளிலே !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (5-Feb-22, 1:18 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 207

மேலே