ஏனோ தனிமை உற்றேன்

புதுவரவு பிறந்திருக்க
வரமாய் வந்து இணைந்திருக்க
கண்களில் குளம் இது ஆனந்தத்தின்
அடையாளமோ?!!

மரணம் கண்டு மீண்டேன்
மகளை மண்ணில் ஈன்றெடுக்க,
வலியை விழைந்து ஏற்றேன்
வெண்மணியின் வருகைக்காக!
பச்சிலம் சிசுவின் மாசற்ற முகம் - இதை
பார்க்கவே பிறந்தனவோ என் விழிகள்
உயிரும் கொடுப்பேன் உனக்காக என
உரக்க உறைத்தது என் இதயம்

மழலை மலந்திருக்க
கொண்டவனும் கைக்கொடுக்க
பெற்றவரும் துணையிருக்க
அன்னையாய் ஒரு அன்றில் நான்!

ஏனோ இந்த மாற்றம்?
ஏதோ ஒரு கலக்கம்!

அயராது வலி சுமந்து
அறுவை சிகிச்சை ஏற்று
உயிரனுக்கள் உறைந்து
ரணம் கண்ட யாக்கையாலோ?!

உறக்கம் தொலைத்து
உயிரைக் கலந்து
ஊட்டுவிக்கும் தாய் பால் அது
ஊரவில்லை என்றோ?

கர்ப்பகால சுரப்பிகள்
கணப்பொழுதில் மறைந்து
கண்ணீராய் கொட்டி கை அசைப்பதாளோ?!

வாழ்வின் வசந்தம் என் செல்லப்பிள்ளை
வாழ்க்கையே இவள் ஆனதாலோ?!

ஏனோ இத்தனிமை!
என்று தீரும் இத்தனிமை!!
கிளர்ச்சியின் உச்சத்தில் மிதக்கும் தருணம்
கிணற்று தவளையாய் சுருங்கினேன் நானும்

துகில் உரித்த என் கண்களுக்கு வாராதோ நித்திரை
நகர்கின்ற நாட்களோடு கடக்காதோ வெறுமை

எல்லாம் கிடைக்கப் பெற்றேன் - பின்பு
ஏனோ தனிமை உற்றேன்??
கண்ணீருடன் நான்!

Dedicated to all mothers undergoing postpartum depression🙏

எழுதியவர் : கோதை (28-Jan-22, 10:55 pm)
சேர்த்தது : kodhai
பார்வை : 395

மேலே