காலத்தால் அழியாத காதல் வாழ்க
காலத்தால் அழியாத காதலே ..
****************
மானுடம் தோன்றா முன்னே காதலை/
மாவினம் போற்றியதே மண்ணோடும் செழித்ததே !
காதலும் வீரமும் கண்ணெனக் கொண்டபோதும்/
சாதலும் நிகழ்ந்திடுமே கைக்கிளைப் பெருந்திணையில்!
உள்ளப் பொருத்தங்களை உணராதோர் எதிர்ப்பதனால் /
கள்ளச் செயலாகக் காதலதும் மாறிடுதே!
காவியக் காதலெலாம் கனிவோடு போற்றுபவர்
கண்முன் நடப்பவற்றைக் கண்மூடி எதிர்க்கலாமோ !
சீலத்தால் ஞாலத்தில் சீரோடும் சிறப்போடும்
காலத்தால் அழியாதக் காதலதும் வாழ்கவாழ்க !
-யாதுமறியான்.