காதலின் புதுவாழ்வு

கதலின் புது வாழ்வு...

மாற்றுத் தமனியில் மறுபடித் தொடர்ந்திடும்,

மகிழ்வின் பெருவெள்ளம் மடைமாறிப் பாய்ந்திடும்!

அடையுண்ட சிரைகளில் ஆனந்தம் பெருகிடும்,

கடைமடை அறையிலும் உயிர்வளி உலவிடும்!

வளிவழி யாவினும் புதுவழித் தோன்றிடும்

நனிசிற் றறைகளின் பலம்கூடிச் சிறந்திடும்!

விழிநீர் ஊற்றுகள் மெல்ல அமைந்திடும்,

பழியிலாக் காதலின் புதுவாழ்வு நீண்டிடும்!!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (21-Feb-22, 9:55 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 84

மேலே