இனியவளே

நேரினில் கண்டேன்
நேரினில் கண்டேன்
என்னை யுண்ணும்
பெண் இவளோ...

பக்கத்தில் சென்றேன்
பைத்தியம் ஆனேன்
பருவம் உணர்ந்தேனே... (2).

நான் இன்று நதியாகிறேன் - நீ என்ற
கடலோடு உனை சேர்கிறேன்
ஒன்றோடு ஒன்று ஆகிறேன் - உன்னோடு
நான் சேர்ந்து உப்புப் பாகிறேன்

இல்லையென்றால் இல்லையென்றால்
மண்ணோடு மண்ணாக நான் ஆகிறேன்.
வேண்டாம் என்றால் வேண்டாம் என்றால்
விதியோடு விதியாக நான் போகிறேன்.

பெண்ணே உனை
பெண்ணே உனை
எப்போதுமே நான் தாங்குவேன்.

நேரினில் கண்டேன்
நேரினில் கண்டேன்...

எழுதியவர் : நா விஜய் பாரதி (21-Feb-22, 10:53 am)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : iniyavalae
பார்வை : 177

மேலே