விலகாதே - ஒருதலை

விலகாதே விலகாதே - எந்தன்
விழியைவிட்டு தூரம் விலகாதே
போனாலும் வருவேனே - உந்தன்
வாசம்தொட்டு நானும் வருவேனே
உன்னை காணத்தான் இந்த கண்கள்
என்று எண்ணியே இருக்கேன்
என்னை வெறுக்கவே நீ துணிந்தால்
இந்தமொத்த ஜென்மத்தை வெறுப்பேன்
பாதை யாவிலும் முட்கள் - என்னை
தேத்தி வந்தது உன் சொற்கள்
என் காதல் அலையை - நீ
கரையில் தள்ளாதே
கூச்சம் என்பதை மறந்தேன் - நான்
கூடு சேரவே பார்த்தேன்
உன்னை தேடி வந்திட - நான்
நதியாய் ஆனேனே
கொட்டும் மழையிலே நனைந்தேன்
கொஞ்சி பேசிட துடித்தே
பாவை முகத்திலே நான்
பாதை மறந்தேனே