மயக்கம் சில வினாடிகள்

தன்மனதிற்கு பிடித்த இணையைத் தேர்ந்தெடுத்த புறா,
சிறகுகளைக் கோதிக்கொண்டு,
தன் அழகை வசீகரப்படுத்தி
இணையருகில் வந்தமர்ந்தது,
இணையோ படபடப்பில்
தன் கழுத்தை அங்கும் இங்கும் அசைத்து விழித்தது,
நாணத்துடன் பெண் தள்ளிச்சென்றது,
இணைஇணைய தன் கழுத்தைத் திருப்பி,
இரண்டும் முத்தத்தைப் போட்டியிட்டு,
உள்ளிழுக்க,
கால்கள் தடதடக்க,
இறகுகள் படபடக்க,
கண்கள் சொருக,
வாய்நீர் ஒழுக,
இரண்டும் தன் கூட்டிற்குள் தஞ்சமானது..

எழுதியவர் : தணல் (21-Feb-22, 1:38 pm)
பார்வை : 123

மேலே