நீயின்றி எனக்கேது உலகு
அன்பே அழகே அமுதமாய் வந்த குமுதமே ...நம்காதலையே
கருப்பொருளாக கொண்டு உனையே
உட்பொருளாக கண்டு நாம் வாழும்
காதல் உலகிற்கு சொல்வோமாக...
நின் விழியின் சுழல் கண்டே சுழல கற்றன காதல் கோள்கள்
உன் கண்கள் சொல்லும் சேதியில் எழுந்தன பல காதல் இலக்கியங்கள்
உன்கூந்தல் நிறம் கண்டே சூடியன காதல் மேகம் கருவண்ணம் ஆக
நின் கைவளையல் கண்டு வடிவம் கொண்டதுதான் ... வட்ட வடிவில் காதல் நிலா...
உன்சிரிப்பில் ஒலித்தவையே
காதல் இசை
நின்மூச்சுக் காற்றே காதல் உலகின் பிராண வாயு
உன் பாதமே பூமி...
நின் சிரசே வானம்
உன் பற்கள் நிறம் கண்டே ஒளிர்ந்தன கதிரவனும் விண்மீனும்
நின் உதட்டழகில் சிவந்தவன சில...
செவ்வானம் எனும் பெயரில்
உன் நாவசைவில் எழுந்தனவே எண்ணற்ற காதல் மொழிகள்
நின் கைகள் காட்டும் ஜாடையில்
உதித்தன பல காதல் அகராதிகள்
உன்ஒழுகும் எச்சிலும் காதல்உலகின் நீராக மாறின ...ஏனெனில்
நீரின்றி
அமைவதில்லையாம். உலகு ...இங்கு நீயின்றி எனக்கேது உலகு.