காதல் பிறக்குமா
" கண்கள் கலங்கியது ,
அவல நிலை விளங்கியது ,
கண்கள் குளமாகியது ,
மனமோ போர்க்களம் ஆகியது,
கண்கள் நீரைச் சொறிந்தது ,
உயிரை சோகம் உறிந்தது,
கண்கள் வேதனையில் மூடியது,
சோக நினைவுகள் ஒன்று கூடியது,
அந்த கண் தான் உனை என்னிடம் சேர்த்தது,
'என் கண்ணே நீதான்' என்று உனை
பேச வைத்தது,
அந்த கண் தான் இன்றும் உனை
காண துடிக்கிறது,
உன் அன்பை எண்ணி கண்ணீர்
வடிக்கிறது,
அக்காதல் இனியில்லை என வாடுகிறது,
ஆறுதலை அது தேடுகிறது,
மாறுதலை நாடி ஓடுகிறது,
காலம் மாறுமா? கண்கள் திறக்குமா?
காட்சிகள் மாறுமா?
காதல் மீண்டும் பிறக்குமா?"