வலிகள் மட்டும் வாழ்க்கை அல்ல 555

***வலிகள் மட்டும் வாழ்க்கை அல்ல 555 ***



தோழமையே...


கதிரவை சூழ்ந்த இருள்
கொண்ட கார்மேகம்...

தூறல் போட
காத்திருக்கும் மழை மேகம்...

கண்ணெதிரே இருள்
சூழ்ந்திருந்தாலும்...

தன லட்சியத்தோடு காத்திருக்கும்
பாலைவன பறவை...

உன் வாழ்க்கை வலிகள்
சூழ்ந்துள்ளது என்று வருந்தாதே...

உன் லட்சிய எண்ணங்களில்
மனஉறுதியோடு போராடு...

இருள்கூட
உனக்கு வழிவிடும்...

உறுதியோடு போராடு
என் தோழமையே.....


***முதல்பூ .பெ .மணி .....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (3-Mar-22, 5:45 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 588

மேலே