ராஜேந்திரன் முதல்வர் 01-Mar-2022
கோவை அரசினர்
தொழில்நுட்பக் கல்லூரி...
முதல்வர் ராஜேந்திரனின்
பச்சை வண்ணக் கையொப்பம்...
சேர்க்கை அனுமதி வழங்கி
மாணவன் கல்வி வளர்க்கும்...
தேர்வு நுழைவுச்சீட்டு வழங்கி
தகுதி அளக்கும்...
சான்றிதழ் வழங்கி வளமுடன்
வாழ வழிகள் காட்டும்...
வோல்டேஜ் அளக்கும் கேத்தோட்
ரேய்ஸ் ஆசிலாஸ்கோப்பை
அடக்கி ஆளத் தெரிந்த
ராஜேந்திரனுக்கு எலக்ட்ரிக்
சிக்னல்ஸ் கைகட்டி
சேவகம் செய்யும்...
ரேடியோ வேவ்ஸ்.. மைக்ரோ
வேவ்ஸ்... எலக்ட்ரோ மேக்னடிக்
வேவ்ஸ் சொல்லித் தரும்
ராஜேந்திரனின் ராஜாங்கம்
மாணவனை உலகமயமாக்கும்...
மாணவ தேசத்து மன்னவன்..
மனிதநேயத்தில் மாண்பினன்
நட்பு பாராட்டும் இனிய நண்பன்...
ராஜேந்திரன்.. உன்னால்
தலைமுறைகள் வளரும்.. வாழ்த்தும்..
வாழ்க பல்லாண்டுகாலம்.. அது
வானமும் வசப்படும் வசந்தகாலம்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
👏💐👍😀🍫🌹