முத்தமிழ் மாறன் 24-02-2022

முத்தமிழ் மாறன்... நீ
வாஞ்சிநாதன்... அபிக்கு
முத்தென வந்த புதல்வன்...

பிரியமான மாறன்...
பிறரை வெல்ல வேண்டும்
என்பதில்லை நீ...
அழகிய திட்டமிடலில்
அற்புத நட்புத்தளம் கொண்டு
உன்னை நீயே வென்று கொண்டிரு...

வரலாற்றில் இடம் பிடிக்க வாழ
வேண்டும் என்பதில்லை... உன்னை
உனக்குப் பிடிக்க வாழ்ந்திரு...
வரலாறும் உனக்கு இடம் கொடுக்கும்...

ஒரு புதிய நூறாண்டு
உனதானது... அது
இதுவரை யாரும் காணாதது...
அன்பெனும் சந்தனத் தென்றல் வீசும்
அழகிய நந்தவனம் அது...

அதில் வாழ்வின் பயணமெங்கும்
வசந்தங்கள் வரமாகும்...
வளங்கள் வசமாகும்...

முத்தமிழ்...
உலகம் உந்தன் கையில்...
வசந்த வாழ்த்துகள்... இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்...

அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
💐🌹👏👍🎂🍫❤

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (26-Feb-22, 11:35 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 117

மேலே