90 மார்க்

"அம்மா...அம்மா,,,ப்ரொக்ரெஸ் ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க. 90 மார்க்மா"
"ஏங்க...ஏங்க.. இங்க வந்து பாருங்க.நம்ம பையன் மார்க் ஷீட் வந்துடுச்சி. 90 மார்க் வாங்கியிருக்கன். எனக்கு கையும் ஓடல...காலும் ஓடல..கொஞ்சம் இருடா உனக்கு திருஷ்ட்டி சுத்தி போடறேன்."
அப்பா வந்து ரிப்போர்ட்டை பார்க்கிறார்.
"உன் பையனப் பத்தி எனக்கு தெரியாது!.தெளிவா பார்த்துட்டு அப்புறமா சுத்திப்போடு. இல்ல அவனையே ஒரு போடா போடு.அறிவுகெட்ட முண்டம் உன் மகன் எல்லா சப்ஜெக்ட்டிலும் சேர்த்து ..மொத்தமா 90 மார்க்தான் எடுத்திருக்கான்.

எழுதியவர் : ஜீவன் எ மகேந்திரன் (4-Mar-22, 9:36 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 89

மேலே