வாழ்க மங்கையர்- வாழ்துவோம் பெண்களை மங்கையர் தினத்தில்
வாழ்க மங்கையர் -
வாழ்துவோம் பெண்களை மங்கையர் தினத்தில்
பெண் இல்லை என்றால் பிறப்பில்லை;
பெண்மை இல்லை என்றால் சிறப்பில்லை;
பிறப்பால் வேண்டாம் ஆண் பெண் பிரிவினை.
பெண்மையின் வடிவம் அன்பு;
பேனிக்காக்க வேண்டியது நம் பண்பு;
பெற்றவளும் தாய்தான்;
பெண்ணடிமை என்பவன் பேடி தான்.
வாழப்பிறந்தவள் பெண்;
வாழ்த்தப் பிறந்தவள் பெண்;
வாழவிடுவோம் பெண்ணை.
பெண் அவள் மகளாய், மனைவியாய், அன்னையாய், சகோதரியாய்,
அவதாரம் எடுக்கின்றாள்;
பெண் இவள் வாழும் தெய்வமாய் வலம் வருகின்றாள்;
பெண்மையை பேனிக்காப்போம்.
பிறப்பில் உயர்ந்தது பெண்மை;
பெண்மைக்குள் உண்டு பொறுமை;
பெண்மையால் உண்டு பெருமை;
பெண்னைக் காக்க வேண்டியது நமது கடமை.
வலிமையானவள் பெண்;
வலியைத் தாங்குபவள் பெண்;
வாழ்க்கையைத் தாங்குபவள் பெண்;
வாழ வேண்டியவள் பெண்.
பெண்ணுக்கு அழகு பணிவு;
பெண்மைக்கு அழகு துணிவு;
பெண்ணால் வரும் உயர்வு;
பெண் சுமப்பாள் கருவை;
பெண் சுரப்பாள் கருணை;
பெண் சிறப்பாள் சேவையால்.
பெண்கள் சமுதாயத்தில் புண்கள் அல்ல;
சமுதாயத்தின் கண்கள்;
விட்டில் பூச்சல்ல பெண்;
விடிவிளக்கே பெண்;
பெண் இல்லாத வீடு;
பேய் அண்டும் இடுகாடு;
பெண் மானத்தைக் காப்போம்.
மகளிர் என்பவள் மக்கிய குப்பை இல்லை,
மணக்கும் சந்தனம்;
சிக்கிய புழு அல்ல,
சீறும் வேங்கை;
சிதைக்கும் கண்டாடி அல்ல,
சிதையாத அழகுச் சிலை;
சித்திரப்பாவை அல்ல;
சிறகடித்து பறக்கும் பறவை;
சாதனை செய்து சரித்திரம் படைக்க பிறந்த புரட்சி பெண் அவள்;
சிரிக்கும் பெட்டகம் அல்ல
சீறும் சிறுத்தை;
சிறைசேதம் செய்யும் அடிமையல்ல,
சிறைபடுத்தும் அன்பகம்;
ஆண் என்று பெண் என்று
பாலின பாகுபாடு இல்லாது சமத்துவம் காண்போம்;
கூண்டுக் கிளியல்ல பெண் ,
கூவித் திரியும் குயில்.
மத்தளம் அல்ல அடிபட;
மகத்தான சாதனை படைக்க வந்தவள்;
படுக்கையறை மெத்தையில்லை அவள்;
பண்பட்ட வாழ்க்கை புத்தகம் அவள்;
சிற்றின்ப பொருளல்ல;
சீண்டி விளையாட;
வதைபடும் பெண்ணல்ல
வாழும் தேவதை;
உரசும் கல்ல அல்ல;
உருவாக்கும் கலைக்கோவில்;
கறை படிந்தவள் அல்ல;
அக்கறையோடு கருவறை சுமக்கும் கண்கண்ட தெய்வம் அவள்;
உரசும் நெருப்பு அவள்;
ஜடம் அல்ல திடம் அவள்;
வேண்டாம் வேண்டாம் ;
வேதனை தரும்,
சிசு வதை வேண்டாம்;
பெண் வதை வேண்டாம்;
பாலியல் வன் கொடுமை வேண்டாம்.;
அடுப்பங்கரையில் மட்டும் அரசி அல்ல அவள்;
ஆட்சி செய்யும் வீட்டிற்கும், நாட்டிற்கே பேரரசி;
ஆணின் மனதில் நடனமாடும் கலையரசி;
பெண் குழந்தை இவள் அன்பைச் சொரியும் இளவரசி;
பெண்ணே வீறு கொண்டு எழுந்திரு!!!
விடியும் விடியும் என்று காத்திருக்காதே;
மூன்று முடிச்சுக்குள் முடங்கவில்லை உன் உலகம்;
உன் மூச்சிக் காற்றுக்கு வேண்டாம் அடிமைத்தனம்;
உன் மூச்சுக் காற்றால் பகைவனை அழித்திடு.
முழு சுதந்திரம் பெற போரிடு;
முடிவைத் தேடி புறப்பட்டு விடு.
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் கூற்றை மெய்ப்படுத்த வேண்டும்மா;
பெண்ணே விதி என்று கிடக்காது, விழித்தெழு;
பிறர் வியந்திட செயல்படு;
விண்ணைத் தொடும் அளவு புகழ் பெறு;
வாழ்க மங்கையர்கள்;
வாழ்துவோம் ஆண்கள் அணைவரும் பெண்களை மங்கையர் தினத்தில்.
அ. முத்துவேழப்பன்