செம்முள்ளி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(‘ர்’ இடையின ஆசு)

செம்முள்ளி யென்றாற்சி லேஷ்மந டுங்கிவிடும்
விம்முமுலை மாதே விளம்பக்கேள் - கம்முகின்ற
மாந்தகணம் ஐயமிவை மாறுஞ் சிறுவருக்குச்
சே’ர்’ந்தசுர தோஷமும்போஞ் செப்பு

- பதார்த்த குண சிந்தாமணி

கபவிருத்தி, கணமாந்தம், சுவாசம், குழந்தைகளுக்கு உண்டாகும் சுரம் ஆகியவற்றைச் செம்முள்ளி நீக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Mar-22, 9:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே