போர் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்

போர்விநாய கன்போன்ற புண்ணியனைப் போற்றியே
தார்மாலை போட்டே துதிப்போர்க்கு – மார்தட்டி
வந்துதவு வான்;நமது வாழ்நாளில் நம்இனிய
சொந்தமெனச் செய்வான் சிறப்பு! 1

பொறுமை சிகரமாம் போர்விநாய கன்தாள்
சிறுமதி கொண்டோரே சீற்ற(ம்) - உறாவண்ணம்
போற்றித் தொழுதாலே போதுமே; புண்ணியன்
ஏற்றம் தருவான் இனிது! 2

போர்விநாய கன்தாளைப் போற்றிக் கணநேரம்
யார்வந்தும் எண்ணித் துதித்தாலும் - வேர்போல
ஆலமர மாய்த்துணை அங்கே இருப்பானே;
ஞாலமதில் வேறுயார் உண்டு? 3

விநாயகர் பட உதவி - தினமலர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Mar-22, 3:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே