டிக் டிக் டக் டக் டேக் டேக்

போக் போக் போக்குன்னு ரொம்ப தூரம் வாக் பண்ணிட்டு!
டாக் டாக் டாக்குன்னு நண்பர்களுடன் ரொம்ப நேரமாக போனில் கதை பேசிட்டு!
கேக் கேக் கேக்குன்னு பிறந்த நாளே இல்லாமல் எக்லஸ் கேக்கை எக்ஸஸ்ஸா சாப்பிட்டுட்டு!
டேக் டேக் டேக்குன்னு ஒரு கிளாஸ் லெமன் ஜீஸை சில்லுன்னு பல கிளாஸ் குடிச்சிட்டு!
ஷேக் ஷேக் ஷேக்குன்னு நாலு கிளாஸ் மேங்கோ ஷேக்கை, சந்தடியின்றி உள்ளே தள்ளிட்டு!!
லொக் லொக் லொக்குன்னு இப்போ இரும்பிண்டு, தும்பிண்டு அவஸ்தை பட்டுண்டு இருக்கேன்!
ஏக் ஏக் ஏக்குன்னு ஹெட்ஏக்கும் கூடவே வந்து கொஞ்சம் தலையை ஷேக் பண்றது!
டிக் டிக் டிக்குன்னு ஸ்மூத்தா அடிச்சிக் கொண்டிருந்த இதயம் இப்போது!
டக் டக் டக்குன்னு கொஞ்சம் கெட்டியாவே அடிக்க ஆரம்பித்து விட்டது!
பக் பக் பக்குன்னு என் மனசு அடித்துக் கொள்கிறது, இதையெல்லாம் பார்த்து விட்டு!
திக் திக் திக்குன்னு இல்லையா உங்களுக்கு, இதை எல்லாம் கேட்கும் போது?
போக் டாக் கேக் டேக் ஷேக் லொக் ஏக் டிக் டக் பக் திக்...

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (11-Mar-22, 8:52 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 117

சிறந்த நகைச்சுவைகள்

மேலே