தூக்கம் - புதுக்கவிதை

தூக்கம்; வாழ்வின் இனிய சுகமென
இயற்கை தந்த வரம் உனக்கு - அது
ஒரு மென்மையான அழகிய ஊஞ்சல்;

பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையில் ஆடும் முடிவில்லா
மோன நிலை;

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு,
உழைப்பவனுக்கும் அதே மொழி,
இடம், பொருள், ஏவல் இல்லை;

மடித்த கையும் தலைச் சும்மாடும் போதுமே;
மரத்தடி நிழல் போதுமே!
குட்டித் தூக்கம் என்றும் சுகமே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Mar-22, 2:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 298

மேலே