போதையின் பாதையில்
போதையின் பாதையில்...
--''-''--''''--''
ஆல மரமாகும் நாம்வாழும் சமுதாயம் !-ஐயகோ
ஆலகால விடமாகும் அதைச் சீரழிக்கும் மதுபானம் !
போதையதன் பாதையிலே
புதைந்தவர்கள் பலகோடி - கஞ்சா
புகையினது மூட்டத்திலே முடிந்தவர்கள் அம்மாடி !
மேதைகளும் பேதைகளும்
செல்வர்களும் வறியவரும் - பெரும்
வலியவரும் எளியவரும்
மதியிழப்பார் போதையிலே !
ஆறாகப் பெருகுகிடுதே சாராயம் - ஐயகோ
பாழாகிப்போகிடுமே சமுதாயம்!
சீரான வாழ்வினையே சிதைத்துவிடும்
சீண்டாதீர் இளைஞர்களே போதைப்பொருள் !
-யாதுமறியான்..